இலங்கையுடன் 3ஆவது டி-20.. இந்திய அணியில் ஆடும் லெவனில் பல அதிரடி மாற்றங்கள் !
இலங்கையுடன் 3ஆவது டி-20.. இந்திய அணியில் ஆடும் லெவனில் பல அதிரடி மாற்றங்கள் !
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் மோதுகிறது
இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்துவீச தயாராகி வருகிறது. இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. ஆதரவு வெற்றிபெற இலங்கை அணி முனைப்பு காட்டவுள்ளது. இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 183 ரன்கள் குவித்தது.
இதனால் இன்றும் முதலில் பேட்டிங் செய்வதால் ரன் குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில், இந்திய அணியில் இன்றையப் போட்டியில் ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி: ரோகித் சர்மா, வெங்கடேஷ் ஐயர். ஸ்ரேயாஸ் ஐயர். சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
newstm.in