உண்டியல் சேமிப்பை இலங்கை நிவாரண நிதிக்கு வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவி.. குவியும் பாராட்டு !!
உண்டியல் சேமிப்பை இலங்கை நிவாரண நிதிக்கு வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவி.. குவியும் பாராட்டு !!
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கை தமிழர்கள் அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி படகில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்கான மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ள நிலையில், முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும் தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
அந்த வகையில் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். சிறுமி ஒருவர் நிதியுதவி அளித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அல்பைனா மெட்ரிகுலேசன் பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் பில்ஸா சாரா என்ற மாணவி தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாயை இலங்கை மக்களுக்கான நிவாரணத் தொகைக்காக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கல் லால் குமாவதிடம் வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சங்கல் லால் குமாவத் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார்.
newstm.in