திருமணம் முடிந்த 3வது நாள்.. காதல் மனைவி எரித்துக் கொலை.. விசாரனையில் ‘பகீர்’ தகவல்..!

திருமணம் முடிந்த 3வது நாள்.. காதல் மனைவி எரித்துக் கொலை.. விசாரனையில் ‘பகீர்’ தகவல்..!

Update: 2021-12-09 11:43 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் தனியார் வறுகடலை மில் உள்ளது. இந்த மில்லின் அருகில் உள்ள முட்புதரில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்தப் பெண் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த சகாய ராஜ் - செல்வமேரி தம்பதியின் மகள் கிளாடிஸ் ராணி (20) என்பது தெரியவந்தது. கிளாடிஸ் ராணியும், அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதன் விளைவாக கிளாடிஸ் ராணி கர்ப்பம் ஆனார். இது குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவர, கடந்த 2-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் கிளாடிஸ் ராணிக்கும் ஜோதிமணிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்ததும், இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து, அதாவது 4-ம் தேதி வெளியே சென்று வரலாம் என்று ஜோதிமணி, கிளாடிஸ் ராணியை அழைத்துள்ளார்.

இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். அதன் பின் ஜோதிமணி மட்டும் வீட்டிற்கு தனியாக வர, கிளாடிஸ் ராணி குறித்து கேட்ட போது, அவள் முன்னரே வந்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து ஜோதிமணியும் ஊர் முழுவதும் தேடி, அதன் பின் அன்று மாலை அங்கிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்களுக்கு ஜோதிமணி மீது சந்தேகம் வலுத்துள்ளது.

அவரைப் பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்ட போது, போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், மனைவியை கொன்றதே அவர் தான் என்பது தெரியவந்துள்ளது.

ஏனெனில், காதலித்து திருமணம் செய்த மனைவி கிளாடிஸ் ராணியின் கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல என்று சந்தேகம் அடைந்த ஜோதிமணி, அவனியாபுரம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் வைத்து கிளாடிஸ் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Similar News