ஆறாவது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் மீது 3-வது மனைவி பரபரப்பு குற்றசாட்டு ..!!

ஆறாவது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் மீது 3-வது மனைவி பரபரப்பு குற்றசாட்டு ..!!

Update: 2021-08-04 05:10 GMT

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தவர் சவுத்ரி பஷீர்.

அதன் பின், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் அந்த கட்சியில் இருந்தும் விலகினார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் சவுத்ரி பஷீரின் 3-வது மனைவி நக்மா, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அதில் சவுத்ரி பஷீருக்கு என்னையும் சேர்த்து ஏற்கனவே ஐந்து மனைவியர் உள்ளோம்.

இதனையடுத்து ஷயிஸ்டா என்ற பெண்ணை 6-வது திருமணம் செய்யப் போவதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என்னை அடித்து துன்புறுத்தினார் என்றும் முத்தலாக் வாயிலாக என்னை விவாகரத்து செய்து வீட்டை விட்டு துரத்தினார்.

கடந்த 2012-ம் ஆண்டு பஷீரை திருமணம் செய்தேன். அப்போது இருந்தே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தார். பெண்களை துன்புறுத்துவதில் அலாதியான விருப்பம் உடையவர் என கூறினார்.

இதையடுத்து முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் பஷீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News