மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையங்களில் சுமார் 1,500 போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இந்த மண்டலத்தில் பணிப்புரியும் போலீசாரின் உடல்நனை காக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி இவர்களின் ஊட்டச் சத்தாக நாள்தோறும் காலை, மாலை தலா 2 வாழைப்பழங்கள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை இந்தூரின் மேற்குப் பகுதி மாவட்ட எஸ்.பி. மஹேஷ் சந்திர ஜெயின் அனுப்பி உள்ளார்.

கடுமையான பணிச்சுமை காரணமாக போலீஸார் பலருக்கு காலை உணவு அருந்தவும் நேரம் கிடைப்பதில்லை. இதை சமாளிக்க அவர்களுக்கு சோதனை முறையில் வாழைப் பழங்கள் அளிக்கும் திட்டம் அமலாகி உள்ளது. இதன் பலனை பொறுத்து மற்ற காவல் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

எனினும் வாழைப்பழம் அளிக்கும் முறையை ம.பி. மாநிலத்தின் வேறுசில காவல் நிலையங்கள் சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்திவிட்டன. இது ஒரு நல்ல திட்டமாகவும் போலீஸாருக்கு பலன் அளிப்பதாகவும் இருப்பதால் முதல் முறையாக அந்தத் திட்டம் பெரிய அளவில் அமலாக்கப்பட்டுள்ளது. 

தற்போது மத்திய பிரதேசத்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags: