ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்.. தம்பதிக்கு குவியும் வாழ்த்துகள் !!
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்.. தம்பதிக்கு குவியும் வாழ்த்துகள் !!
கர்ப்பிணி பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் அழகான 4 குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியில் ஆரிஸ் - அல்மாஜ் பானு தம்பதி வசித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அல்மாஜ் பானுவை அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அல்மாஜ் பானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருந்ததை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். எவ்வித பாதிப்பும் இல்லாமல் நான்கு குழந்தைகளும் பிறந்தன. இதில், 2 ஆண் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது தாயும், 4 சேய்களும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவை தொடர்பான புகைப்படம் வைரலாகியதால் பலரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
newstm.in