விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த 4 ரசிகர்களுக்கு சிறை!!
விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த 4 ரசிகர்களுக்கு சிறை!!
பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆசையில் அவரது ரசிகர்கள் நான்கு பேர் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது களத்திற்குள் நுழைந்தனர்.
பலத்த பாதுகாப்பையும் கடந்து அவர்கள் களத்திற்குள் நுழைந்து கோலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கோலியும் மறுப்பு ஏதும் சொல்லாமல் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.
இந்நிலையில் அத்துமீறி களத்திற்குள் நுழைந்தது மற்றும் பாதுகாப்பை மீறிய குற்றத்திற்காக அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
Crazy love for @imVkohli #INDvsSL #PinkBallTest pic.twitter.com/Ilalxvf1xs
— jayanth a rao (@MTRBISIBELEBATH) March 13, 2022
newstm.in