இந்த மாதமே முடிக்க வேண்டிய 4 முக்கிய வேலைகள்.. இல்லையெனில் பணம் எடுப்பதில் சிக்கல் வரும் !

இந்த மாதமே முடிக்க வேண்டிய 4 முக்கிய வேலைகள்.. இல்லையெனில் பணம் எடுப்பதில் சிக்கல் வரும் !

Update: 2021-12-16 07:35 GMT

2021ஆம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. சரியாக இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன. இதனிடையே, ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சில முக்கிய வேகைகளை முடிக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், இந்தாண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நீங்கள் முக்கியமாக உடனடியாக முடிக்க வேண்டிய 4 பணிகள் உள்ளன. 
 
PF கணக்கு:

உங்களிடம் PF கணக்கு இருந்தால் அப்போது கட்டாயமாக இந்த வேலையை உடனடியாக முடிக்க வேண்டும். PF கணக்கு வைத்திருப்போர் தங்கள் அக்கவுண்ட்டுக்கு நாமினியை (Nominee) நியமிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித் தாக்கல்:
2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தை கருத்தில் கொண்டு இந்த சலுகை வழங்கப்பட்டது.
 


வாழ்வுச் சான்றிதழ்:

பென்சன் வாங்குவோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்வுச் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வுச் சான்றிதழ் என்பது ஒரு பென்சனர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். எனினும், இந்த ஆண்டுக்கு வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

PF - ஆதார் இணைப்பு:

PF கணக்குடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் UAN நம்பருடன் உடனடியாக ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள்.

newstm.in

Similar News