ஈரத்துணிகளை காயப்போட்ட போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!!
ஈரத்துணிகளை காயப்போட்ட போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!!
ஈரத்துணிகளை கம்பியில் காயப்போட்ட போது மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தை சேர்ந்த அகமது (38) - பர்வீன் (32) தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் தேவனப்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட, பீடி காலனியில் வசித்து வருகின்றர்.
இந்நிலையில் வழக்கம்போல், பர்வீன் தனது துணிகளை துவைத்து காயப்போட முற்பட்டுள்ளார். அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால், உள்ளிருக்கும் ஒரு உலோக கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக, அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்து பர்வீன் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த அவரது கணவர் பர்வீனை காப்பாற்ற யற்சி செய்தார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மேலும் அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவர்களது குழந்தைகள் மீதும் மின் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அனைவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in