குளத்தில் நீச்சல் அடித்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
குளத்தில் நீச்சல் அடித்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
ஆந்திராவில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 6 மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாசம் மாவட்டத்தில் மாணவர்கள் 6 பேர் அருகேயிருந்த குளத்தில் நீச்சல் அடிப்பதற்காக ஒன்றாக சென்றனர். குளத்தில் இறங்கிய அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.
குளத்தில் குதித்த மாணவர்களில் சிலர் ஆழத்திற்கு சென்றனர். நீச்சல் தெரியாத நிலையில் அவர்கள் சிக்கி கொண்டனர். இதனால் தங்களை காப்பாற்றும்படி உதவி கேட்டு அலறினர்.
அவர்களது சத்தம் கேட்டு நீச்சல் பயிற்சி பெற்ற சிலர் குளத்திற்குள் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 2 மாணவர்களை உயிருடன் மீட்டனர். 4 மாணவர்களை காப்பாற்ற முடியவில்லை.
நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுது. அவர்கள் சிந்தலா கவுசிக், முன்னாங்கி சிவாஜி, மட்டினேனி சுப்ரமணியம் மற்றும் அப்புரி ஹரி என அடையாளம் காணப்பட்டது.
newstm.in