4 ஆண்டுகள் சரியாக தூங்கவில்லை.. நாயை போல் என்னை அடித்தார்.. கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார் !!

4 ஆண்டுகள் சரியாக தூங்கவில்லை.. நாயை போல் என்னை அடித்தார்.. கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார் !!

Update: 2022-03-08 17:31 GMT

இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். இந்தியா உலகக் கோப்பையை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அதன் பிறகு அவர் பெயரிலான ஆப் தொடங்கி அதில் தனது முழு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் பாலியல் வீடியோக்களுக்காக கைது என பாலிவுட் திரையுலகில் புயலை கிளப்பியவர். 

இந்த நிலையில், கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கு, தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் லாக் அப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார்.  

பூனம் பாண்டே கூறும்போது, நான் சாம் பாம்பேவுடன் 4 ஆண்டுகள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 ஆண்டுகளும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன், என கூறியுள்ளார். 
இதனால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பூனம் பாண்டே. அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

இதைவிட இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரமும் பங்கேற்ற பூனம் பாண்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அப்போது, சிறிய ஆடைகள் அணிவது, என்னுடைய உடலைக் காட்டுவது, இதனால் என்னை வெட்கம் இல்லாதவள் என நீங்கள் சொன்னால் அதை நான் ஏற்று கொள்ளப்போவதில்லை. இரவில் என் வீடியோக்களைப் பார்ப்பவர்கள்தான் பகலில் என்னை திட்டுகிறார்கள் என பூனம் பாண்டே பதிலடி கொடுத்திருந்தார்.  

newstm.in

Tags:    

Similar News