உக்ரைன் அதிபரை கொல்ல ஆயுதங்களுடன் புகுந்த 400 கூலிப்படையினர்.. பரபரப்பு தகவல் !!

உக்ரைன் அதிபரை கொல்ல ஆயுதங்களுடன் புகுந்த 400 கூலிப்படையினர்.. பரபரப்பு தகவல் !!

Update: 2022-03-01 18:45 GMT

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ஆம் தேதி முதல் ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யா படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கி  தொடர்ச்சியாக மக்களையும், சிறையில் உள்ள கைதிகளிடமும் ஆயுதங்களை கொடுத்து ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிடச் செய்து வருகிறார். இதனால் மக்களும் உயிரிழக்கின்றனர். மேலும் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். 

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது. இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ற்போது புதிய தகவல் என்னவென்றால், உக்ரைன் அதிபரோடு அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷ்யா உத்தரவிட்டு இருக்கிறது என தகவல் சொல்லப்படுகிறது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார். மேலும் கீவ் நகருக்குள் நாசவேலையில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

newstm.in

Tags:    

Similar News