40,000 பேர் கொன்று குவிப்பு.. போகோ ஹராம் தலைவா் தற்கொலை !!

40,000 பேர் கொன்று குவிப்பு.. போகோ ஹராம் தலைவா் தற்கொலை !!

Update: 2021-06-09 15:52 GMT

நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பு ண. இந்த தீவிரவாத அமைப்பு மாணவிகளை கடத்துதல், பொதுமக்களை கொள்ளுதல், கிராமத்தில் புகுந்து மொத்தமாக மக்களை அழித்தல் போன்ற கொடிய செயல்களில் ஈடுபட்டுவந்தது. அந்த அமைப்புக்கு எதிராக அந்நாட்டடு ராணுவம் தொடர்ந்து பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில், போகா ஹராமின் தலைவா் அபுபக்கா் ஷெகாவு தங்களுடனான சண்டையின்போது தற்கொலை செய்துகொண்டதாக மேற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியக்கான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பு (ஐஎஸ்டபிள்யூஏபி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் அபு மூசாப் அல்-பா்னாவியின் குரலில் வெளியான ஒலிப் பதிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஒலிப்பதிவில், சாம்பிஸா வனப் பகுதியில் போகோ ஹராம் தலைவா் அபுபக்கா் தங்கியிருந்த இடத்தை ஐஎஸ்டபுள்யூஏபி படையினா் சுற்றிவளைத்தனா். அவா்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட அபுபக்கரும் அவரது அமைப்பினரும் அங்கிருந்து தப்பியோடினா். 5 நாட்கள் நீடித்த இந்த சண்டையில் போகா ஹராமின் தலைவா் அபுபக்கா் ஷெகாவு மற்றும் அவரது பாதுகாவலர்கள் இருந்த இடைத்தை சுற்றிவளைத்தோம்.

எனினும் எங்களிடம் பிடிபடவும் அவமானத்தை சந்திக்கவும் விரும்பாத அபுபக்கா், வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டாா் என்று அந்த ஒலிப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தகவலை போகோ ஹராம் அமைப்பு இதுவரை உறுதி செய்யவில்லை.

ஒரு காலக்கட்டத்தில் போகோ ஹராமுடன் ஐஎஸ்டபிள்யூஏபி ஆயுதம் ஏந்திய அமைப்பு இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த அமைப்புடனான தொடா்பைத் துண்டித்துக் கொண்டது. போகோ ஹராம் முஸ்லிம் பொதுமக்கள் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்தவும் பெண்களை தற்கொலைத் தாக்குதலுக்கு பெருமளவில் பயன்படுத்துவதற்கும் அபுபக்கா் உத்தரவிட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து போகோ ஹராமிடமிருந்து ஐஎஸ்டபிள்யூஏபி அமைப்பு பிரிந்தது. இதனையடுத்து அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

நைஜீரியாவில் இஸ்லாம் அடிப்படைவாத அரசை அமைக்க வலியுறுத்தி போகோ ஹராம் அமைப்பு கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை 40 ஆயித்துக்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

newstm.in

Tags:    

Similar News