தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!!

தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!!

Update: 2022-06-06 04:30 GMT

தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதன்படி தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி, சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி, தமிழ்நாடு காவல் அகாடெமி கூடுதல் இயக்குனராக ஜெய கௌரி, மத்திய மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை தவிர தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் எஸ்பியாக சுந்தரவதனம், மதுரை எஸ்பியாக சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்பியாக பாஸ்கரன், திருவாரூர் எஸ்பியாக சுரேஷ்குமார், ராமநாதபுரம் எஸ்பியாக தங்கதுரை, திருவள்ளூர் எஸ்.பி.யாக பி.சி.கல்யாண், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சென்னையில் 32 காவல் ஆய்வாளர்கள் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, “சென்னை மாநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடனும், மேலும் தேவைப்படும் சமயங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News