பிரபல நகைக்கடையில் ரூ.45 லட்சம் மதிப்பு நகைகள் கொள்ளை..

பிரபல நகைக்கடையில் ரூ.45 லட்சம் மதிப்பு நகைகள் கொள்ளை..

Update: 2020-02-08 17:18 GMT

சென்னையின் பிரபல நகைக்கடையான ஜி ஆர் டி நகைக்கடையில் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கையாடல் செய்ததாக அந்த கடையின் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஒன்றான ஜி ஆர் டி கடை பல கிளைகளோடு இயங்கி வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள கிளை ஒன்றில் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போனது அதன் உரிமையாளரை அதிர்ச்சியடைச் செய்தது.

கணக்குத் தணிக்கையின் போது இந்த கையாடல் விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நகைக்கடையின் உதவி மேலாளர் பார்த்திபன், ஊழியர்கள் வெங்கடேஷ், நம்மாழ்வார் உள்ளிட்டோர் மீது தாம்பரம் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், நகைக்கடையின் மேனேஜரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 
 

newstm.in

Tags:    

Similar News