தமிழகத்தில் 49 லட்சம் பேர்.. அம்பலமானது அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் 49 லட்சம் பேர்.. அம்பலமானது அதிர்ச்சி தகவல்..!

Update: 2022-04-08 19:10 GMT

தமிழகத்தில், 49 லட்சத்து மூவாயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 52 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

49 லட்சத்து மூவாயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளவில்லை. ஒரு கோடியே 37 லட்சம் பேர் தவணை காலம் முடிந்தும், இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

நேற்றைய நிலவரப்படி, 1.09 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 12 - 13 வயதுக்கு உட்பட்டவர்களில் 67.23 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 3292 கிராம பஞ்சாயத்துகளிலும், 121 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா மெகா தடுப்பூசி திட்டத்தின் மூலம் மட்டும் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Similar News