கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4ஆவது திருமணம் செய்த கொடூரன்!!
கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4ஆவது திருமணம் செய்த கொடூரன்!!
மூன்று முறை திருமணம் செய்தும் குழந்தை இல்லாததால் கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4ஆவது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் இவருக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இவர் பரமேஸ்வரியின் மூன்று மகள்களில் 13 வயது உடைய சிறிய மகளை அழைத்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று சிறுமிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.
ராதாகிருஷ்ணனின் தாய் ருக்மணி, சிறுமியின் தாய் பரமேஸ்வரியும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் நடந்த அன்றே ராதாகிருஷ்ணன் சிறுமியை வற்புறுத்தி உறவு கொண்டதால் சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திகேயன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராதாகிருஷ்ணன் போக்சோ சட்டத்திலும், அதற்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டனர்.
newstm.in