பெரும் சோகம்.. கனடா சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் மரணம் !!

பெரும் சோகம்.. கனடா சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் மரணம் !!

Update: 2022-03-14 09:02 GMT

கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் டொரண்டோ பகுதியில் இந்திய மாணவர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை ஒரு வேனில் பயணம் செய்துள்ளனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் வேனுக்கு அதிகளவில் சேதமாயின.
இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் விவரங்களை கனடா வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷாபிந்தர் சிங் (21), கர்னாபால் சிங் (22), மோகித் சவுகான்(23), பவன் குமார் (23), ஹர்ப்ரீத் சிங் (24 ) ஆகிய இந்திய மாணவர்கள் உயிரிந்துள்ளனர்.

கனடா விபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ள கனடாவுக்கான இந்திய ஆணையர் அஜய் பிசாரியா உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்திய துணை தூதரக குழு மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

newstm.in

 

Tags:    

Similar News