கனடாவில் சாலை விபத்து – இந்திய மாணவர்கள் 5 பேர் பலி!!

கனடாவில் சாலை விபத்து – இந்திய மாணவர்கள் 5 பேர் பலி!!

Update: 2022-03-14 19:16 GMT

கனடாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

ஒன்டாரியோ தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மாணவர்கள் வேனில் சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஹர்ப்ரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோகித் சவுகான் மற்றும் பவன் குமார் என 5 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து ஒன்டாரியோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இந்திய மாணவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் உறுதி அளித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்த தரப்படும் கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா கூறியுள்ளார்.

விபத்தின்போது படுகாயம் அடைந்த இந்திய மாணவர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கனடாவின் கிரேட்டர் டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் பகுதியை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in


 

Similar News