தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி 5 பேர் உயிரிழப்பு!!

தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி 5 பேர் உயிரிழப்பு!!

Update: 2022-01-31 09:21 GMT

உத்தரப்பிரதேசத்தில் தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரில் வேகமாக சென்ற மின்சாரப் பேருந்து ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீதும் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது.

திடீரென பேருந்து தாறுமாறாக ஓடியதால் சாலையில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

விபத்தை ஏற்படுத்திவிட்டு பேருந்து ஓட்டுநர் தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் தயாராகி வரும் நிலையில் இதுபோன்ற விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து மோதி 5 பேர் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News