5 மாநில தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் இன்று ஆலோசனை.. ராகுல், பிரியங்கா ராஜினாமாவா?

5 மாநில தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் இன்று ஆலோசனை.. ராகுல், பிரியங்கா ராஜினாமாவா?

Update: 2022-03-13 08:01 GMT

கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி விலக உள்ளதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 5 மாநிலங்களிலும் தோற்ற காங்கிரஸ் பஞ்சாப்பில் ஆட்சியை ஆம் ஆத்மியிடம் இழந்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளத. மூத்த தலைவர்களும்  கட்சியின் நிலையை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர். 

இந்த நிலையில், அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கட்சித்தலைமை தெரிவித்தது.  

இந்தக் கூட்டத்தில்,  தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் 5 மாநில தேர்தலில் தோல்வி ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் வரவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், தொடர் தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில், காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை காங்கிரஸ் கட்சித்தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கட்சி பொறுப்புகளில் இருந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி விலக உள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

எனினும் தொடர் தோல்வி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சில மாற்றங்கள், ஒருசில அதிரடி நடவடிக்கைகள் இருக்கலாம் என காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

 

Tags:    

Similar News