பாலியல் பலாத்காரம் செய்து 5 வயது சிறுமி கொலை.. 22 வயது இளைஞனுக்கு தூக்கு..!
பாலியல் பலாத்காரம் செய்து 5 வயது சிறுமி கொலை.. 22 வயது இளைஞனுக்கு தூக்கு..!
திரிபுரா மாநிலம், ஹொவாய் மாவட்டம் நிஷன் சந்திர புரா பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் வீடு அருகே வசித்து வரும் அபிஜித் (22) என்ற இளைஞனை கைது செய்தனர்.
அபிஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை வனப்பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார், வனப்பகுதியில் கிடந்த 5 வயது சிறுமியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அபிஜித் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு ஹொவாய் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அபிஜித் குற்றவாளி என்று கோர்ட் இன்று அறிவித்தது.
மேலும், 5 வயது சிறுமியை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளி அபிஜித்திற்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது.