ஆண்டுதோறும் 500 ரேஷன் கடைகளுக்கு.. அமைச்சர் பெரியசாமி சொன்ன தகவல்..!
ஆண்டுதோறும் 500 ரேஷன் கடைகளுக்கு.. அமைச்சர் பெரியசாமி சொன்ன தகவல்..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று (20-ம் தேதி) வீட்டுவசதி மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதன் கேள்வி - பதில் நேரத்தின்போது, ‘புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படுமா..?’ என்ற கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “நடப்பாண்டு முதல் ஆண்டுதோறும் 500 நியாயவிலை கடைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டித் தரப்படும். மக்களின் தேவை என்பது ரேஷன் கடைகள் அருகில் வரவேண்டும், பேருந்துகள் அருகாமையில் வரவேண்டும் என்பதுதான்.
இந்த காலகட்டத்தில் அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதை பார்க்கிறோம். இதை துறை அலுவலர்களுக்கு எடுத்துச் சென்று புதிய நியாய விலைக் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆற்காடு தொகுதி புங்கனூர் ஊராட்சி எல்லாசிகுடிசை, வரதேசி நகர், விளாப்பாக்கம் பேரூராட்சி, சின்னதக்கை பகுதிகளில் பகுதி நேர நியாய விலைக் கடைகள் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.