சுஷ்மிதா சென்னுடன் 56 வயது லலித் மோடி டேட்டிங்.. அதிர்ச்சியில் திரையுலகம் !!

சுஷ்மிதா சென்னுடன் 56 வயது லலித் மோடி டேட்டிங்.. அதிர்ச்சியில் திரையுலகம் !!

Update: 2022-07-15 09:39 GMT

இந்தியாவில் லலித் மோடியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏனெனில் பிரபலமான ஐபிஎல் தொடரை அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணங்களில் ஒருவாரக இருந்தவர்களில் இவரும் உண்டு. அப்போது ஐபிஎல் நிர்வாக தலைவராகவும் லலித் மோடி இருந்தார். 

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் இவர் டேட்டிங் செய்வதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது சர்வதேச அளவில் டிரெண்ட் ஆகிவருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம், ஐபிஎல் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் குற்றம்சாட்டப்பட்ட லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் டேட் செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 18 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றவர் சுஸ்மிதா சென். பாலிவுட்டில் 1996ம் ஆண்டு வெளியான டஸ்டக் படத்தில் அறிமுகமானார். தமிழில் 1997ம் ஆண்டு நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்' படத்தில் ஷக்கலக்கா பேபி பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டார். 

அதன்பின்னர் உடலில் ஏற்பட்ட ஒரு வித நோய் காரணமாக சில காலங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் சுஷ்மிதா. 46 வயதாகும் சுஷ்மிதா சென் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. கடந்த 2018ம் ஆண்டு இளம் வயது ரோமன் ஷாவல் என்பவரை டேட்டிங் செய்தார். மூன்று வுடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிந்தனர். 

இந்நிலையில், தற்பொது முன்னாள் ஐபிஎல் பாஸ் லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது சரி பாதி சுஷ்மிதா சென் என அவருடன் மாலத்தீவு உள்ளிட்ட இடங்களில் டேட்டிங் செய்த புகைப்படங்களை போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மோசடி வழக்கில் சிக்கி உள்ள லலித் மோடி இந்தியாவுக்கு திரும்பாமல் லண்டனில் இருந்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை சுஷ்மிதாவுடன் அவர் டேட்டிங் செய்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் தான் செய்து வருகிறோம். விரைவில் அதுவும் ஒருநாள் நடக்கலாம் என லலித் மோடி மற்றொரு ட்வீட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். லலித் மோடிக்கு ஏற்கனவே மினால் என்பவருடன் திருமணமாகி விவகாரத்து ஆகிவிட்டது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் 56 வயதில் 46 வயது நடிகையுடன் டேட்டிங்கா? என கிண்டல் அடித்து வருகின்றனர்.


newstm.in

Similar News