நீட் தேர்வை விட 5,8 பொதுதேர்வுக்கு கெடுபிடி அதிகம்! கொந்தளிப்பில் பெற்றோர்கள்!
நீட் தேர்வை 5,8 பொதுதேர்வுக்கு கெடுபிடி அதிகம்! கொந்தளிப்பில் பெற்றோர்கள்!
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியதில் இருந்தே அதிரடி காட்சிகள் தான். ஒவ்வொரு முறை நீட் தேர்வின் போதும் தேர்வு நடைப்பெற்ற மையங்களில் மாணவ மாணவிகளக்கு நேர்ந்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆவணங்களை சரி பார்க்கிறோம். பிட் பேப்பர்கள் இருக்கிறதா என்று சோதிக்கிறோம் என்று அவர்களை அனைவர் முன்னிலையிலும் மானபங்கம் படுத்தாத குறை தான்! காதுக்குள் பிட் பேப்பர் இருக்கிறதா என்று டார்ச் லைட் அடித்து சோதித்த இவர்கள் தான், அரசு வேலைகளுக்கானத் தேர்வுகளில் லட்சங்களை லஞ்சமாக வாங்கிக் கொண்டு தேர்வு செய்கிறார்கள் என்கிற முணுமுணுப்பு பொதுமக்களிடையே எழுந்தது.
கம்மல் போடக்கூடாது. முடியை விரித்துப் போட்டு வரவேண்டும். முழுக்கை சட்டை போட்டு வரக்கூடாது என்று மனரீதியாக மாணவிகளை தேர்வு எழுதும் முன்னரே டார்ச்சர் செய்தார்கள். அவர்களுக்கு அந்த கதி என்றால், 9 வயது குழந்தைகளுக்கு அதைக் காட்டிலும் கொடூரமான தண்டனை காத்திருக்கிறது. குழந்தைகள் பாவம் பரிட்சைக்கே பயப்படும் நிலையில், அவர்களை பரீட்சை ஹாலுக்குள் அனுமதிக்கவே பல்வேறு ஆவணங்களை காட்ட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, பெற்றோரின் ஆதார் கார்டு ஆகியவற்றை தேர்வு எழுதுவதற்கு முன்பகா காட்ட வேண்டுமாம். இதைக் காட்டிலும் குழந்தைகளை கொடுமைப்படுத்தும் அரசு வேறு எதுவும் இருக்க முடியாது என்று மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் அவர்கள் பல ஆவணங்களை சமர்ப்பித்தால் தான் தேர்வு எழுத முடியுமாம்.இந்நிலையில் அதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில், தேர்வு எழுத வரும் மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, பெற்றோரின் ஆதார் கார்டு ஆகியவற்றை காட்ட வேண்டுமாம். இதையும் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
newstm.in