முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 5-ம் தேதி அமைச்சரவை கூட்டம்..!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 5-ம் தேதி அமைச்சரவை கூட்டம்..!

Update: 2022-03-02 12:51 GMT

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது.

அத்துடன், நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

Similar News