ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்.. இலங்கை பெண் படைத்த சாதனை !!

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்.. இலங்கை பெண் படைத்த சாதனை !!

Update: 2021-10-22 17:30 GMT

நாட்டிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலம்.

இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 6 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். இதில் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகளாகும். இப்படி ஒரு பிரசவசம், இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. இப்படியொரு பிரசவசம், இலங்கை மருத்துவ வரலாற்றில் முன்னெப்போதும் பதிவாகவில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலுள்ள 'நைன்வெல்ஸ்' என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம், அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு பிரசவ வழி ஏற்பட்டது. அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்கை மூலம் பிரசவம் பார்த்ததில் 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  இரண்டு நிமிட இடைவெளியில் 3 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என அறுவை சிகிச்சை மூலம் 6 குழந்தைகள் எடுக்கப்பட்டன.

இக்குழந்தைகளின் எடை கூடிய குழந்தை 1.6 கிலோகிராம் கொண்டது என்றும், எடை குறைந்த குழந்தை 870 கிராமுடனும் உள்ளதாகவும், தற்போது, தாயும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in


 

Tags:    

Similar News