திடீர் தீ விபத்தில் 6 சொகுசு பேருந்துகள் எரிந்து நாசம்!!

பழுது பார்க்கும் நிலையத்தில் தீவிபத்து.. 6-க்கும் மேற்பட்ட சொகுசு பேருந்துகள் எரிந்து சேதம்....!

Update: 2020-02-06 17:47 GMT

செங்கல்பட்டு அருகே தனியார் பேருந்து பழுது பார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6க்கும் மேற்பட்ட சொகுசு பேருந்துகள் எரிந்து நாசமாகின. வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியில் தனியார் பேருந்து பழுதுபார்க்கும் நிலையம் உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த பேருந்துகளுக்கு தீ பரவியது. இதில் 6க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மறைமலை நகர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். தீவிபத்து ஏற்பட்ட உடன் அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த தீவிபத்து குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

Tags:    

Similar News