தமிழ்நாட்டில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு..!!

தமிழ்நாட்டில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு..!!

Update: 2022-05-23 12:40 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று அன்றைய தினம் முதல் பெண்களுக்கு பல்வேறு விதமான பயனளிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டுவந்தார். 

அதன்படி முதல் அறிவிப்பாக நகர்புற பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவித்தார்.
மேலும் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமொன்று அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. 

நாளுக்கு நாள் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மற்றும் பயன் அளிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத கால பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் 5,971 ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 2,448 சுகாதார பணியாளர்களுக்கும் 11 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்படும். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4,848 செவிலியர்களுக்கு ரூபாய் 18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்படும். ஹெல்த்கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

Similar News