பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் வெட்டி கொடூரக் கொலை.. பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல் !!
பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் வெட்டி கொடூரக் கொலை.. பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல் !!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஜுட்டாடா கிராமத்தில் ராமாராவ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வழக்கம்போல் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அதிகாலையில் அவரது வீட்டில் இருந்து வழக்கத்திற்கு மாறாக கதறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராமாராவ் வீட்டில் ரமுழுவதும் ரத்தமாக நிரம்பி கிடந்துள்ளது. அறையில் சென்று அக்கம்பக்கத்தினர் பார்த்தப்போது அதிர்ச்சியில் உறைந்தனர். அங்கு ராமாராவ், அவருடைய மனைவி உஷா, அதே குடும்பத்தை சேர்ந்த ரமாதேவி, அருணா, 2 வயது மகன் உதய், இரண்டு மாத குழந்தை ஊர்நிஷா ஆகிய ஆறு பேரும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதில் 2 வயது மற்றும் 2 மாத குழந்தையும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் அப்பகுதியில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் அங்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது, ராமாராவ் வீட்டில் அதேபகுதியைச் சேர்ந்த அப்பல்ராவை என்பவர் அதிகாலை நுழைந்துள்ளார். அவர் தான் குழந்தைகள் உள்பட 6 பேரையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
மேலும், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அப்பல்ராவை கைது செய்த போலீசார் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in