புரோ கபடி லீக்- பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 6 அணிகள்... தமிழ் தலைவாஸ் ஏமாற்றம் !!
புரோ கபடி லீக்- பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 6 அணிகள்... தமிழ் தலைவாஸ் ஏமாற்றம் !!
ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற, 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் இப்போட்டிகள் நடக்கும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து நகரங்களிலும் போட்டி நடத்தப்படவில்லை.
12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 22 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
அந்த வகையில், நேற்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன. புள்ளிப்பட்டியலில் குஜராத் ஜெயண்ட்ஸ் 4ஆவது இடமும், பெங்களூர் புல்ஸ் 5வது இடமும், புனேரி பல்டான் 6வது இடமும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி 47 புள்ளிகள பெற்று 11வது இடத்தைப் பிடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளதால், நாளை முதல் எலிமினேட்டர் சுற்றுகள் தொடங்க உள்ளனர்.
அதன்படி, நாளை நடைபெறும் எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோதா- புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டர் 2 சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணிகள் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி அணியுடன் மோதவுள்ளன. அதில் இருந்து இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். புரோ கபடி தொடரின் இறுதிப்போட்டி வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது.
newstm.in