60 வயசு பாட்டிக்கு 6 வருஷ காதல்!! 28 வயது இளைஞரை மணந்தார்!!

60 வயசு பாட்டிக்கு 6 வருஷ காதல்!! 28 வயது இளைஞரை மணந்தார்!!

Update: 2021-11-22 09:34 GMT

28 வயது இளைஞரை மணந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் 60 வயசு பாட்டி ஒருவர். இத்தனைக்கும் இவர்கள் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பாகிஸ்தானின் ஹபிசாபாத் நகரைச் சேர்ந்தவர் 28 வயதான ஹபீஸ் முகமது நடீம் என்ற இளைஞர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், போலந்து நாட்டைச் சேர்ந்த 60 வயதான ப்ரோமா என்ற பெண் ஒருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் உள்ள நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவருக்கும் இடையே 32 வயது வித்தியாசம் உள்ள நிலையில் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் பொதுவாக தெரிந்த எந்த மொழியும் கிடையாது. இருவரும் தங்களின் தாய் மொழியை மட்டுமே அறிந்த நிலையில், மொழிபெயர்ப்பு செயலி மூலம் இருவரும் உரையாடி வந்தனர்.

இந்நிலையில், முகமது - ப்ரோமா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி ப்ரோமா விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்தார். அங்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹபீப்பை மணப்பதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறிய ப்ரோமோ தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார். இந்த நிகழ்வின் போது பாத்திமா தனது கைகளில் மருதாணியுடன், பாரம்பரியமான பிரகாசமான சிவப்பு நிற திருமண ஆடையை அணிந்திருந்தார்.

இஸ்லாமிய சட்டப்படி, மனைவியாகும் பெண்ணுக்கு மணமகன் கட்டயமாக ஒரு கட்டணத்தை பணமாக கொடுக்க வேண்டும். அதை பாத்திமாவுக்கு முகமது கொடுத்தார். முகமது ஐந்து நாட்களுக்கு முன்னர் 18 வயதான உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யவிருந்தார். ஆனால் அப்பெண்ணை மணக்க முடியாது எனக் கூறிவிட்டு பாத்திமாவை மணந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், “என் மனைவியின் கூந்தல் அழகு, முக அழகு, கைகள் அழகு, கால்கள் அழகு. எல்லாமே அழகு. நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். நாங்கள் 24 மணி நேரமும் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

அதே சமயம் பாத்திமாவும், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். அவரது செயல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இந்த காலத்தில் இப்படி ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத காதலா? என்று பலர் வியந்துள்ளனர். மேலும் பலர் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News