ரஷ்யா வீசியதில் 60 % ஏவுகணைகள் வெடிக்கவில்லை.. அமெரிக்கா !!

ரஷ்யா வீசியதில் 60 % ஏவுகணைகள் வெடிக்கவில்லை.. அமெரிக்கா !!

Update: 2022-03-26 08:30 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 31ஆவது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்காக ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக ஏவுகணைகளை வீசி உக்கிரமான தாக்குதலை நடத்துகிறது. இதனால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். 

ஏவுகணைகளை வீசியதால் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்தன. ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியும் சில கட்டிடங்கள் இடிந்தும் காணப்படுகிறது. இந்நிலையில், ரஷ்ய ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல் செயலிழந்து போகிறது என அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர். ஏவுகணைகளின் 60 சதவீத தோல்வி விகிதத்தில் வெடிக்கத் தவறுவது மற்றும் இலக்கை தவறவிடுவது ஆகியவையும் அடங்கும். போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா 1,100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது. ரஷ்ய ஏவுகணையின் தோல்வி விகிதம் நாளுக்கு நாள் மாறுபடும் என தெரிவித்தனர்.


newstm.in
 

Tags:    

Similar News