60 சவரன் நகைகள் கொள்ளை!! முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்!!
கோவை சுங்கம் அருகேயுள்ள பாரி நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் மேரி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், தனது கணவர் பிரான்ஸ் ரொசாரியோவுடன் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை நேரத்தில் வீட்டுக்கதவை ஒரே அடியில் உடைத்து மர்ம நபர்கள் 4 பேர் உள்ளே நுழைந்துள்ளனர். முகமூடி அணிந்திருந்த நால்வரும், தம்பதி இருந்த அறைக்கு சென்று கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களைக்
கோவை சுங்கம் அருகே தம்பதியரை கத்தியைக் காட்டி மிரட்டி 60 பவுன் தங்க நகைகளை முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை சுங்கம் அருகேயுள்ள பாரி நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் மேரி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், தனது கணவர் பிரான்ஸ் ரொசாரியோவுடன் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை நேரத்தில் வீட்டுக்கதவை ஒரே அடியில் உடைத்து மர்ம நபர்கள் 4 பேர் உள்ளே நுழைந்துள்ளனர். முகமூடி அணிந்திருந்த நால்வரும், தம்பதி இருந்த அறைக்கு சென்று கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களைக் கட்டிப் போட்டனர். பின்னர் வீட்டில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றனர்.
இதையடுத்து, வீட்டின் மேல்தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த பிரான்ஸ் ரொசாரியாவின் தந்தை, காலையில் மகன், மருமகளை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் பின்னர், தம்பதியரை அவர் மீட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவிரித்துள்ளனர்.
newstm.in