ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 600 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் !!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 600 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் !!
ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்தது. இதனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். தற்போது தலிபான்கள் அட்டூழியம் தொடங்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள், இசைக்கு அனுமதி கிடையாது போன்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இப்படி ஆதிக்கம் செலுத்தும் தலிபான்களுக்கு சவாலாக இருப்பது பஞ்ச்ஷிர்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டு வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு அந்த மாகாணத்தை சுற்றி வளைத்த தலிபான்கள் தேசிய கிளர்ச்சி குழுவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் அதை எதிர்ப்பு படையினர் திட்டவட்டமாக மறுத்தனர். தாங்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த மோதலில் தலிபான்கள் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பஞ்ச்ஷிர் மாகாண போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலிபான்கள் பிடிபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினாலும் அவர்களால் இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
newstm.in