இந்தியாவில் 67 % மக்கள் அதை அணிவதில்லை !! ஆய்வில் தகவல் !!
இந்தியாவில் 67 % மக்கள் அதை அணிவதில்லை !! ஆய்வில் தகவல் !!
இந்தியாவில் அதிகமான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா வைரஸ்கள் தற்போது இந்தியாவை மிரட்டி வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் முகக்கவசம் அணியவேண்டும், அடிக்கடை கைகளை கழுவவேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், கொரோனா தடுப்பூசி மையங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியையும் சரியாகப் பின்பற்றுகின்றனரா என லோக்கல் சர்க்கிள்ஸ் (Localcircles) என்னும் சமூக வலைத்தளம் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 312 மாவட்டங்களில் கேள்வி பதில் முறையில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவில் சுமார் 67% மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும் சுமார் 44% மக்கள் உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கக்கூடிய வகையிலான முகக்கவசங்களை அணியவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான மக்கள் துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசங்களையே அணிவதாகவும், இந்த முகக்கவசங்களால் டெல்டா பிளஸ் போன்ற உருமாறிய வைரஸ்களிடமிருந்து தப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலர் முகக்கவசங்களை சரியாக அணியாமல், கடமைக்காக மட்டுமே அணிவதால், அதன் மூலமும் கொரோனா அதிகளவில் பரவியுள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்து மூன்றாவது அலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் முகக்கவசத்தை அணிவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in