கடலூரில் 7 பெண்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!!

கடலூரில் 7 பெண்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!!

Update: 2022-06-06 10:26 GMT

கடலூர் மாவட்டம் கொடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருங்குணம் குச்சிபாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இங்குக் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் 8 பேர் குளிக்கச் சென்றனர்.

அதில் ஏழு பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கிக் குளித்ததாக தெரிகிறது. அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சுமந்தா, பிரியா, நவநீதா ஆகிய மூன்று இளம் பெண்கள், சங்கீதா , மோனிஷா , திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய நான்கு சிறுமிகள் என மொத்தம் 7 பேர் தண்ணீரில் மூழ்கினர்.

இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7 பேரையும் சடலமாக கண்டெடுத்தனர். அவர்களது உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து வருத்தம் அளிப்பதாகவும், குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


newstm.in

Similar News