73 வயது மூதாட்டிக்கு 35 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த குழந்தை!!

73 வயது மூதாட்டிக்கு 35 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த குழந்தை!!

Update: 2022-01-02 08:29 GMT

73 வயது மூதாட்டி 35 ஆண்டுகளாக கருவில் சுமந்து வந்த கல் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு அண்மையில் வயிற்று வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அவரின் வயிற்றை சோதனை செய்து பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்தது.

அவரின் வயிற்றில் குழந்தை உருவாகி அந்த குழந்தை கல்லாக மாறியுள்ளது. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் மூதாட்டி நடமாடி வந்துள்ளார்.

சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த கல் குழந்தை 7வது மாதம் வரை வளர்ச்சியடைந்து கல்லாக மாறியுள்ளது.  மருத்துவ உலகில் இவ்வறான கருவை லித்தோபிடியன் (Lithopedion) என்று கூறுகிறார்கள்.

கருமுட்டையில் கரு உருவாகாமல் அடி வயிற்றில் கரு உருவானால் அதை லித்தோபிடியன் என் அழைக்கிறார்கள். இவ்வாறாக சாதாரணமாக எல்லோருக்கும் கரு உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வறாக உருவாகும் கரு ஒரிரு நாளில் தானாக வெளியேறிவிடும். அடி வயற்றில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்தும்.

இந்த மூதாட்டிக்கு  35 ஆண்டுகளுக்கு முன்பு கரு அடி வயற்றிகுள் சென்று அங்கிருந்து வெளியேற முடியாமல் வளர்ச்சியடைந்துள்ளது. அதிர்ஷ்ட வசமாக இது இவ்வளவு ஆண்டுகள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது வலியை ஏற்படுத்திய நிலையில் 35ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது.

newstm.in

Similar News