சுவற்றில் துளைப்போட்டு 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..!!

சுவற்றில் துளைப்போட்டு 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..!!

Update: 2022-05-25 04:55 GMT

காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு கூட்டுரோட்டில் நகை அடகு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், அனில்குமார் நேற்று வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை மீண்டும் கடையை வந்து திறந்து பார்த்த அவர், அடகு கடைக்கு பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையில் சுவற்றில் துளையிட்டு தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள சாலையில் நகை அடகு கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News