78 யூ-டியூப் செய்தி சேனல்கள் முடக்கம்.. மத்திய அரசு தகவல்..!

78 யூ-டியூப் செய்தி சேனல்கள் முடக்கம்.. மத்திய அரசு தகவல்..!

Update: 2022-07-20 10:57 GMT

யூ-டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் உட்பட 560 யூ-டியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நாட்டில் பல்வேறு யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், “யூ-டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் மற்றும் 560 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசு அனுமதி வழங்குகிறது” என தெரிவித்துள்ளார்.

Similar News