விரக்தியில் 7 வது மகள் கொலை.. பாசக்கார தந்தைக்கு ஆயுள் தண்டனை..!
விரக்தியில் 7 வது மகள் கொலை.. பாசக்கார தந்தைக்கு ஆயுள் தண்டனை..!
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கைக்வாட் டவுனை சேர்ந்தவர் பசவராஜா ஈரப்பா மகதும்மா (35). இவருக்கு, சங்கீதா (7) என்ற மகள் இருந்தார்.
கூலி வேலை செய்து வந்த பசவராஜாவால் சங்கீதாவை வளர்க்கவும், படிக்க வைக்கவும் முடியவில்லை. இதனால் அவர் கடன் தொல்லையிலும் சிக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக விரக்தியடைந்த அவர், பெற்ற மகள் என்று கூட பாராமல் சங்கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இந்த கொலை சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி நடந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கைக்வாட் போலீசார், பசவராஜாவை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக சிக்கோடி 7-வது கூடுதல் கோர்ட் மற்றும் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போது நீதிபதி எஸ்.எல்.சவுகான், குற்றம் சாட்டப்பட்ட பசவராஜாவுக்கு ஆயுள்தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.