பெண் போலீசாருக்கு 8 மணி நேர வேலை.. கமிஷனர் அதிரடி உத்தரவு..!
பெண் போலீசாருக்கு 8 மணி நேர வேலை.. கமிஷனர் அதிரடி உத்தரவு..!
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மும்பை போலீஸ் கமிஷனர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், “இன்று (8-ம் தேதி) முதல் மும்பையில் பெண் போலீசாருக்கு 8 மணி நேர வேலை அமல்படுத்தப்படும்.
சீனியர் இன்ஸ்பெக்டர்கள் பெண் போலீசாருடன் ஆலோசித்து அவர்களுக்கான பணி நேரத்தை ஒதுக்க வேண்டும். இதை அமல்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டால் அதிகாரிகள், துணை போலீஸ் கமிஷனரை தொடர்புகொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி பெண் போலீசாருக்கு 2 முறைகளில் வேலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை ஆகிய 3 ஷிப்டுகளில் ஏதாவது ஒரு நேரத்தில் பணிபுரிய வேண்டும்.
அல்லது காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரை, இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை உள்ள 3 ஷிப்டுகளில் ஏதாவது ஒரு ஷிப்டில் பணிக்கு வரலாம்’ என்றார்.