ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி!!
ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி!!
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் டோலானா என்ற பகுதியில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழலில் எதிர்பாராத விதமாக திடீரென தொழிற்சாலையில் சற்றென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அவர்கள் தீயை அணைத்து, தீயில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், இதுவரை 8 தொழிலாளர்கள் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமான தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலையில் தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவிப்பதாக கூறினார். மேலும், அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகள் மற்றும் விசாரணையை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.