தலைமறைவான கணவனை தேடும் குஜராத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி!!

தலைமறைவான கணவனை தேடும் குஜராத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி!!

Update: 2022-07-17 08:27 GMT

குஜராத் மாநிலம் சபர்மதி காளிகாம் பகுதியை சேர்ந்த சரிதா என்ற பெண்ணுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்து கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர் இந்த பெண்ணை திருமணம் செய்து தனிக் குடித்தனம் நடத்திவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு தலை மறைவாகிவிட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சரிதா மாயமான கணவரை மீட்டுத் தரக் கோரி அளித்துள்ளார்.

காவல் நிலையத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனுவை அளித்தார்.

ஜயகுமார், குஜராத்திற்கு வேலைக்கு சென்ற போது ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது விஜயகுமார் தலைமறைவானதால் சரிதா, தங்க இடமில்லாமல் பேருந்து நிலையத்திலும் சாலை ஓரத்திலும் தங்கிப் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்.

newstm.in

Similar News