உத்தரப்பிரதேச மாநிலத்தில் மௌரிஸ் ரைடர் என்ற 81 வயது ஓவியர் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்த நபர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

டிஜிட்டல் ரேப் என்ற குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட நபர் சிறுமியிடம் கை விரல்கள் மற்றும் கால் விரல்களை கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்குக்கு முன்னர் வரை டிஜிட்டல் ரேப் பாலியல் குற்றமாக இந்தியாவில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், சம்பந்தப்பட்ட 81 வயது நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு பெற்றோர் இல்லாத காரணத்தால் வேறொரு நபரால் வளர்க்கப்படுகிறார். சிறுமியை வளர்க்கும் நபரும் இந்த ஓவியரும் 20 ஆண்டு கால நண்பர்கள் என்பதால்,  சிறுமியை ஓவியரிடம் விட்டுச் சென்றுள்ளார்

தனது கட்டுப்பாட்டில் இருந்த 17 வயது சிறுமியை அந்த நபர் ஏழு ஆண்டுகளாக தொடர் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளார். சமீப காலமாக இவரின் குற்றச் செயல்களை ஆதாரமாக பதிவு செய்த அச்சிறுமி, அவற்றை காவல்துறையிடம் சமர்பித்து புகார் அளித்துள்ளார்.

newstm.in