வீட்டில் தனியாக இருந்த 87 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை !!
வீட்டில் தனியாக இருந்த 87 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை !!
87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியின் திலக் நகர் பகுதியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 12.15 மணியளவில் மூதாட்டியின் மகள் வெளியே சென்றுள்ளார். இதனால் வீட்டில் மூதாட்டி தனியாக இருந்துள்ளார்.
பின்னர் வெளியே சென்றிருந்த மகள் மதியம் 2 மணியளவில் அவர் வீட்டிற்கு வந்தபோது, தனது தாயாரின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிலிருந்த செல்போன் காணாமல் போனதும் தெரியவந்திருக்கிறது. உடனே அக்கம்பக்கத்திலிருந்த உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தார். அழைத்ததோடு போலீசுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.
அப்போது தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் சென்றதை கவனித்ததாக உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்திருக்கின்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்ததில், வீட்டிற்குள் சென்றது துப்புரவுத் தொழில் செய்யும் இளைஞர் என்பது தெரியவந்திருக்கிறது. துப்புரவுத்தொழில் செய்துவரும் அந்த இளைஞர் மூதாட்டி வசித்துவந்த பகுதியில் துப்புரவுப்பணிகளை செய்துவந்துள்ளார்.
இதனையடுத்து தலைமறைவாக இளைஞரை போலீசார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன் அங்கிருந்த செல்போனையும் திருடிச்சென்றதும் தெரியவந்திருக்கிறது. பின்னர் துப்புறவுத்தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in