இந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு 8,848 பேர் பாதிப்பு.. குஜராத் முதலிடம்.. தமிழகத்துக்கு?

இந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு 8,848 பேர் பாதிப்பு.. குஜராத் முதலிடம்.. தமிழகத்துக்கு?

Update: 2021-05-22 17:08 GMT

இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்திய அளவில் கடந்த சில நாட்களாக கொரோனா குறைந்துவந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து மிரட்டி வருகிறது. இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை நோய்கள் பரவத்தொடங்கி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்புப் பூஞ்சை (மியூகோா்மைகோசிஸ்) நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில மாநிலங்களில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 2,281 பேர், மகாராஷ்டிரா 2,000 பேர், ஆந்திரா 910 பேர், மத்தியப்பிரதேசம் 720 பேர், ராஜஸ்தான் 700 பேர், கர்நாடகம் 500 பேர், தெலங்கானா 350, ஹரியானா 250, தமிழகத்தில் 48 பேர் உள்பட 24 மாநிலங்களில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. சில மாநிலங்களில் அந்த மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதை அடுத்து 23,680 குப்பிகள் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்தை மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். 
 

newstm.in

Tags:    

Similar News