பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 8 மாத குழந்தை பலி!!

பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 8 மாத குழந்தை பலி!!

Update: 2022-06-05 19:36 GMT

பெண்கள் இருவரிடையே நிகழ்ந்த தகராறில் எட்டு மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ராஜர்ஹத் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஷானாஸ் காதுன் (22) என்ற பெண்ணுக்கும் யாஸ்மினா பிபி என்ற பெண்ணுக்கும் இடையே அவர்களின் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஷானாஸ் வைத்திருந்த அவரது எட்டு மாத குழந்தையை பறித்த யாஸ்மினாவும் மற்ற நான்கு குடும்பத்தினரும் தரையில் தூக்கி எறிந்தனர். இதில்  அக்குழந்தையின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது.

குழந்தையை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே யாஸ்மினாவையும் அவருடன் இருந்த நால்வரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து யாஸ்மினா, சாந்தினி உள்ளிட்ட நால்வரை போலீசாரை கைது செய்தனர்.

newstm.in

Similar News