8-ம் வகுப்பு மாணவி கடத்தல்.. கடத்தியது ஆசிரியரா ?
8-ம் வகுப்பு மாணவி கடத்தல்.. கடத்தியது ஆசிரியரா ?
தர்மபுரி அருகே, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான முபாரக் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கடத்திச் சென்றார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அரூர், சேலம் அயோத்தியாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர்.
அப்போது, அயோத்தியாபட்டினம் பகுதியில் இருந்த ஆங்கில ஆசிரியர் முபாரக்கை மொரப்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மொரப்பூர் காவல் நிலையத்துக்கு கூட்டி வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தர்மபுரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
13 வயது பள்ளி மாணவியை திருமணமான ஆசிரியர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.