8வது பாஸானா 50,000 சம்பளம்!! ஊராட்சித் துறையில் வேலை! அப்ளை செய்ய க்ளிக் பண்ணுங்க !

8வது பாஸானா 50,000 சம்பளம்!! ஊராட்சித் துறையில் வேலை! அப்ளை செய்ய க்ளிக் பண்ணுங்க !

Update: 2020-03-07 18:12 GMT

ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

8ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற ஆண்கள், பெண்கல் இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கான சம்பள விகிதம் ரூ. 15,700 முதல் 50,000 வரையில் எனவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு அதிகப்பட்சமாக 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு ஆணையின் படி வயது தளர்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sivaganga.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய தள பக்கத்தில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்திற்கு சென்றோ விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுக்காலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி இம்மாதம் 19.03.2020 மாலை 5.45 மணி.

newstm.in

Tags:    

Similar News